Column Left

Vettri

Breaking News

பிரான்ஸில் நாடு முழுவதும் வன்முறை வெடிப்பு: 1,200 பேர் கைது!!!




பிரான்ஸில் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் வாழ்க்கைச் சுமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்ததை அடுத்து, நாடு முழுவதும் வெடித்த வன்முறைகளில் குறைந்தது 1,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டங்களில் நாடு முழுவதும் சுமார் 550,000 பேர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற மோதல்களின் போது, பொலிஸார் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட அதேவேளை பதிலுக்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சம்பவங்களில் 150 பொலிஸார் காயமடைந்துள்ளனர். பாரிஸ், லியோன், லிமோஜஸ் உள்ளிட்ட பல நகரங்களில் கட்டடங்கள் மற்றும் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டதுடன், லிமோஜஸ் நகர மண்டபத்தின் கூரை பகுதியளவில் சரிந்துள்ளது. மேலும், பல நகரங்களில் கடைகள் சூறையாடப்பட்டு வணிக நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் உயர்நிலைப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்புச் சீர்கேடுகளுக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தில், தற்போது தொழிற்சங்கத்தினரும் மஞ்சள் அங்கிப் போராளிகளும் இணைந்து கொண்டுள்ளனர். பிரான்ஸ் அரசியலில் ஆழமான நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலில் மற்றும் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த வன்முறைகள் வெடித்துள்ளன. இந்த நிலையில். பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் எச்சரித்துள்ளார்

No comments

Subscribe Us