சம்மாந்துறை நீச்சல் தடாகம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு ! பிரதேச சபை தவிசாளரின் துரித நடவடிக்கைக்கு உறுப்பினர். MLA.கபூர் பாராட்டு !!
(மின்மினி மின்ஹா)
சம்மாந்துறை ஜனாதிபதி கலாச்சார விளையாட்டு நிலையத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாகம் பல மாதங்களாகச் செயற்பாடின்றி காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்காக இயங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீச்சல் தடாகம் நீண்டகாலமாகச் செயற்படாமல் காணப்படுவது தொடர்பில் கௌரவ MLA கபூர் அவர்களினால் 18.06.2026ல் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகளும் , முகநூல் மற்றும் இணைய தள செய்தி சேவைகள்,பத்திரிகைகளிலும் கோரிக்கைகளையும் முன்வைதிருந்தார்.
இந்நிலையில், குறித்த நீச்சல் தடாகம் சம்மாந்துறை பிரதேச சபையின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுவதால், அதனை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான தொழினுட்ப நடவடிக்கைகளை சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் கௌரவ. ஐ.எல்.எம். மாஹீர் அவர்கள் துரிதமாக முன்னெடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பயனாக, பல மாதங்களாகச் செயலிழந்திருந்த நீச்சல் தடாகம் மீண்டும் செயற்பாட்டுக்கு வந்துள்ளமை பிரதேச மக்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும், இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
தவிசாளர் கௌரவ. ஐ.எல்.எம். மாஹீர் மேற்கொண்ட துரித நடவடிக்கைக்கு சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் கௌரவ. MLA கபூர் அவர்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த விடயம் சம்மந்தமான நடவடிக்கைகளில் பங்களிப்பு செய்த சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர், சக பிரதேச சபை கௌரவ உறுப்பினர்களுக்கும், தொழில் நுட்ப அதிகாரிகளுக்கும், விடயம் சம்பந்தமாக ஈடுபட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும், ஊழியர்களுக்கும் மற்றும் ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களும் அவர் தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்.
நீச்சல் தடாகம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டதன் மூலம் பிரதேசத்தின் நீச்சல் விளையாட்டு வளர்ச்சிக்கும்,சிறுவர்களினதும், இளைஞர்களினதும் திறமைகளை மேம்படுத்துவதற்கும், சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் நன்றி தெரிவிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments