Column Left

Vettri

Breaking News

அனோஜனின் விடுதலைக்காக பெற்ற மக்களின் கையெழுத்துகள் பெற்றோரிடம் கையளிப்பு!!!




( வி.ரி.சகாதேவராஜா) சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி காரைதீவில் பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய பத்திரங்கள் நேற்று இரவு அனோஜனின் பெற்றாரிடம் கையளிக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு சாதாரண தரப் பிரிவு மற்றும் 2004 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு (JALU) கழக நண்பர்கள் ஒன்றிணைந்து இந்த கையெழுத்து வேட்டையை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது மக்கள் பிரதிநிதிகள் ஆலய பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், நண்பர்கள், ஊடகவியலாளர்கள், உறவினர்கள் பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி, அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து பத்திரத்தில் கையெழுத்து இட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நாளை இவற்றை அனோஜனின் பெற்றோர்கள் கொழும்பு கொண்டு சென்று ஐ.நா.அலுவலகம் மற்றும் சவூதி தூதூவராலயத்திடம் ஒப்படைக்க உள்ளனர். அதேவேளை ஆலையடிவேம்பு மற்றும் திருகோணமலையில் பெறப்பட்ட பத்திரங்களும் ஒப்படைக்கப்படும்.

No comments

Subscribe Us