வளத்தாப்பிட்டி பளவெளியில் வீடு தீக்கிரை; மோட்டார் சைக்கிளும் சேதம்!!!
(தில்சாத் பர்வீஸ்)
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பளவெளி பகுதியில் உள்ள வீடொன்றில் 23ஆம் திகதி நள்ளிரவு வேளையில் தீப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான காரணம் மற்றும் ஏனைய விடயங்களை கண்டறியும் வகையில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னரே தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பான மேலதிக தகவல்கள் தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது.
No comments