Column Left

Vettri

Breaking News

செவ்வாய்க்கிழமை முதல் பஸ் முன்னுரிமைப் பாதை விதிகள் அமுல் – பொலிஸார்!!!




கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நடைமுறையிலுள்ள பஸ் முன்னுரிமைப் பாதை விதிகள் செவ்வாய்க்கிழமை (29) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் 7 பஸ் முன்னுரிமைப் பாதைகள் நடைமுறையில் உள்ளதுடன், அவை காலை 6.00 முதல் 9.00 மணி வரையும், மாலை 4.00 முதல் 7.00 மணி வரையும் செயற்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நேரங்களில் ஏனைய வாகனங்கள் குறித்த பாதைகளில் பயணிக்கவோ அல்லது நிறுத்தவோ அனுமதிக்கப்படாது. அவசரநிலை, விபத்தைத் தவிர்த்தல், கடுமையான போக்குவரத்து நெரிசல் அல்லது திரும்பிச் செல்ல வேண்டிய அவசியம் போன்ற சந்தர்ப்பங்களில் மாத்திரம் அவற்றைப் பயன்படுத்த முடியும். மேலும், செப்டெம்பர் 29 முதல் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் மக்களின் வசதிக்காக 104 சொகுசு பஸ்கள் சேவையில் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

No comments

Subscribe Us