கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற மாணவர்களின் சந்தை கண்காட்சி!!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 02 மாணவர்கள் எம் சிறுவர்களின் நாளைய எதிர்காலம் எனும் கருப் பொருளில் சந்தை கண்காட்சி ஒன்று வியாழக்கிழமை (17) பாடசாலை வளாகத்தில் அதன் அதிபர் எம் எம் நவுப் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது
இச் சந்தை கண்காட்சியில் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
பாடசாலையில் தரம் 02 மாணவர்களின் பெற்றோர்களின் பங்களிப்புடன் வகுப்பாசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இச் சந்தை கண்காட்சியில் பல்வேறு பொருட்கள் மற்றும் உணவுப் பண்டங்கள் காட்சிப்படுத்தப்ட்டதுடன் விற்பனையும் இடம்பெற்றது.
கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலை புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் பாடசாலையின் அதிபர் எம் எம் நவ்ப் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது
No comments