Column Left

Vettri

Breaking News

கல்முனை றோட்டரி கழகத்தின் 27 வது புதிய தலைவராக திருநாவுக்கரசு பதவியேற்பு!!!




( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை றோட்டரி கழகத்தின் 2026/2027 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக ரொட்டேரியன். இரா. திருநாவுக்கரசு நேற்று (19) காரைதீவு லேடி லங்கா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகபதவியேற்றார். இப் பதவியேற்பு நிகழ்வில், இலங்கை மற்றும் மாலைதீவு றோட்டரி மாவட்டம் 3220 இன் மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன். குமார் சுந்தரராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய தலைவரின் பதவியேற்பை சிறப்பித்தார். கல்முனை ரோட்டரிக் கழகத்தின் தலைவர் ரொட்டேரியன் எஸ். தரணிதரன் தலைமையில் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. 2026/2027 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக ரொட்டேரியன். இரா. திருநாவுக்கரசு ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றார். தொடர்ந்து புதிய செயலாளராக ரொட்டேரியன் எம்.சிவபாதசுந்தரம் புதிய பொருளாளராக ரொட்டேரியன் வி.விஜயசாந்தன் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநரால் பதக்கம் அணிவிக்கப்பட்டது. பதவியேற்ற புதிய தலைவர் இரா. திருநாவுக்கரசு, றோட்டரி இயக்கத்தின் “Service Above Self” என்ற உயரிய கொள்கையின் அடிப்படையில் சமூக சேவைகளை முன்னெடுப்பதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். பதவியேற்பு நிகழ்வைத் தொடர்ந்து ரொட்டேரியன் மா.சிதம்பரநாதன், வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர். மறைந்த ரொட்டரியன் குகதாஸுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இரு வசதி குறைந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்பட்டது. சமூக நலன், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மக்கள் நலனுக்கான பணிகளை முன்னெடுப்பதற்கும், கல்முனை றோட்டரி கழகத்தின் சேவைப் பணிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் புதிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் றோட்டரி உறுப்பினர்கள், பிரமுகர்கள், குடும்ப நண்பர்கள் மற்றும் அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Subscribe Us