Column Left

Vettri

Breaking News

அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மகோற்சவம் ஆரம்பம்; இன்று கொடியேற்றம்!!




(செல்வி வினாயகமூர்த்தி) வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவ விழா இன்று (04) வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக ஆரம்பமானது. மகோற்சவத்தின் ஆரம்ப நிகழ்வாக இன்று காலை 7.00 மணிக்கு புண்ணியவாச பூசை உள்ளிட்ட ஆகம கிரியைகள் இடம்பெற்று, தொடர்ந்து கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இன்றைய திருவிழாவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சி மற்றும் அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் சுப்பிரமணியம் கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அத்துடன், இன்றைய திருவிழா சம்மாந்துறை மற்றும் வீரமுனை பிரதேச மக்களின் பங்களிப்புடன் நடைபெற்றதுடன், பக்தர்களுக்கான அன்னதானமும் இடம்பெற்றது. மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு மாம்பழத் திருவிழாவும், செப்டெம்பர் 12ஆம் திகதி சனிக்கிழமை தெப்பத் திருவிழாவும் நடைபெறவுள்ளன. செப்டெம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10ஆம் நாள் திருவிழாவாக பஞ்சமுக அர்ச்சனை நடைபெறவுள்ளது. அன்று பிற்பகல் 4.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை விசேட பூசைகள் இடம்பெற்று, தொடர்ந்து சுவாமி அம்பாறை நகர வீதி வலம் வரும் நிகழ்வு நடைபெறவுள்ளது. மேலும், செப்டெம்பர் 14ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு தீர்த்தோத்சவமும், அதனைத் தொடர்ந்து திருவூஞ்சல், மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதான நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. இத்திருவிழாவில் செப்டெம்பர் 5ஆம் திகதி சனிக்கிழமை திருக்கோவில் மக்களின் திருவிழா,திருக்கோவில் பிரதேசசெயலாளர் ரி.கஜேந்திரன் தலைமையிலும் செப்டெம்பர் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலையடிவேம்பு மக்களின் திருவிழா,ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையிலும் 07ம்திகதி கல்முனை பாண்டிருப்பு பெரியநீலாவணை மக்களின் திருவிழாவும்,08ம்திகதி நற்பட்டிமுனை சேனைக்குடியிருப்பு மக்களின் திருவிழாவும்,09ம்திகதி பட்டிருப்பு தொகுதி மக்களும்,10ம்திகதி நாவிதன்வெளி பிரதேசமக்களின் திருவிழா நாவிதன்வெளி பிரதேசசெயலாளர் ச.ராகுலநாயகி தலைமையிலும் 11ம்திகதி அம்பாறை பிரதேச மக்களும் 12ம்திகதி காரைதீவு பிரதேச மக்களும்,13ம்திகதி மட்க்களப்பு மாவட்ட மக்களும் 14ம்திகதி கல்லோயா இந்து பரிபாலனசபயைினராலும் நடைபெறவுள்ளன. தொடர்ந்து செப்டெம்பர் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு வைரவர் பூசையுடன் மகோற்சவத்தின் சகல நிகழ்வுகளும் நிறைவடையவுள்ளன. மகோற்சவ விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாரின் திருவருளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

No comments

Subscribe Us