Column Left

Vettri

Breaking News

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் ஆபத்தில் சிக்கிய கப்பல் வழிகாட்டியை மீட்ட கடற்படையினர்!!!




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கொழும்பு துறைமுகத்திற்கு வணிகக் கப்பலொன்றை கொண்டுவருவதற்காக அதில் ஏற முயன்றபோது, திடீர் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்த கப்பல் வழிகாட்டி (Pilot) ஒருவர் வியாழக்கிழமை (2026 செப்டம்பர் 17) இரவன்று கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். அதன்படி, கப்பல் வழிகாட்டி கடலில் விழுந்துள்ளதாக கொழும்பு துறைமுகக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, உடனடியாகச் செயற்பட்ட கடற்படையினர், கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த P 163 கரையோர ரோந்துப் படகை அவ்விடத்திற்கு அனுப்பினர். அங்கு அப்படகின் மூலம் கடலில் விழுந்த கப்பல் வழிகாட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, துறைமுக செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு முனையத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டார். மேலும், இலங்கைக்குச் சொந்தமான கடசார் தேடல் மற்றும் மீட்புப் பிராந்தியத்தில் ஆபத்தில் ஆபத்துக்குள்ளாகும் கடற்பயணிகள் மற்றும் மீனவ சமூகத்திற்கு உதவிகளை வழங்குவதற்காக, கடற்படையினர் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர்.

No comments

Subscribe Us