லிபியாவில் இடம்பெற உளள அல்குர்ஆன் மனனப் போட்டிக்கு கற்பிட்டி ரஹ்மானிய்யா மாணவன் அக்ஸானும் தெரிவு!!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
லிபியா நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டிக்கு இலங்கை சார்பாக கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் எம் எம் முஹம்மது அக்ஸான் என்ற மாணவனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
அகில இலங்கை ஜம்மியத்துல் குர்ராஃ அமைப்பின் ஊடாக நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்ற லிபியா நாட்டின் அல்குர்ஆன் மனனப் போட்டிக்கு மாணவர்களைத் தெரிவு செய்யும் தேர்வு போட்டியில் கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி மாணவன் எம் எம் முஹம்மது அக்ஸான் 93.3 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் ஆறாவது இடத்தினை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
No comments