கல்முனை மாநகரில் பக்தி பூர்வமாக இடம்பெற்ற முருகனின் சித்திரத்தேர் பவனி!!!
( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தையொட்டிய சித்திரத்தேர் பவனி இன்று (9) புதன்கிழமை காலை கல்முனை மாநகரில் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, சித்திரத்தேர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு பிரதான வீதியினூடாக பவனி வந்தது.
பெருந்திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து, முருகப் பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நின்று "அரோகரா" முழக்கங்களுடன் முருகப் பெருமானை தரிசித்தனர்.
இடையிடையே பக்தர்களுக்கு நீராகாரம் வழங்கப்பட்டது.
No comments