Column Left

Vettri

Breaking News

கிழக்கில் பேராதனை 1983/84 அணி சமூக செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான கலந்துரையாடல்!




( வி.ரி. சகாதேவராஜா) பேராதனை பல்கலைக்கழகத்தில் 1983/84 வருடங்களில் கற்ற அணியினர் இணைந்து கிழக்கில் பின்தங்கிய பிரதேசங்களில் சமூக சேவையில் ஈடுபடுவதற்கு வசதியாக காரைதீவில் ஒன்றுகூடலை முன்னெடுத்தனர். இதற்காக கனடாவில் வசிக்கும் காரைதீவைச் சேர்ந்த வ.வசந்தாதித்தன் ஏற்பாடு செய்த புதுமனை புகுவிழா ஒன்றுகூடல் நேற்று (8) செவ்வாய்க்கிழமை அவரது காரைதீவு இல்லத்தில் நடைபெற்றது. அணியின் முக்கியஸ்தரும் இலங்கை நிருவாக சேவையின் ஓய்வு பெற்ற முதலாந்தர அதிகாரியுமாகிய சட்டத்தரணி எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்றது. பேராதனைப் பல்கலைக்கழக நூலகர் வி.மகேஸ்வரன், வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பலரும் கருத்துரைத்தனர். கண்டி தொடக்கம் திருகோணமலை வரையுள்ள பிரதேசங்களிலிருந்து 25 க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். பல சமூக சேவை வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.

No comments

Subscribe Us