Column Left

Vettri

Breaking News

அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மகோற்சவம் ஆரம்பம்.




(செல்வி வினாயகமூர்த்தி) வரலாற்று சிறப்புமிக்க அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவ விழா – எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி நாளை வெள்ளிக்கிழமையுடன் ஆரம்பமாகி, செப்டெம்பர் 14ஆம் திகதி திங்கட்கிழமை தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவு பெறவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு விநாயகர் வழிபாடு உள்ளிட்ட கிரியைகளுடன் ஆரம்பமாகியுள்ளன. தொடர்ந்து. நாளை (04) வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு புண்ணியவாச பூசையுடன் கொடியேற்றம் இடம்பெறவுள்ளது. மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக செப்டெம்பர் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு மாம்பழத் திருவிழா நடைபெறவுள்ளது. 12ம்திகதி சனிக்கிழமை தெப்பத் திருவிழாவும் இடம்பெறுவதுடன், செப்டெம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10ஆம் நாள் திருவிழாவாக பஞ்சமுக அர்ச்சனை நடைபெறவுள்ளது. அன்று பிற்பகல் 4.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பூசைகள் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாறை நகர வீதி வலம் வரும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. மேலும், செப்டெம்பர் 14ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு தீர்த்தோத்சவமும்,திருவூஞ்சல் மகேஸ்வர பூஜை அன்னதானமும் நடைபெறவுள்ளன. இத்திருவிழாவில் எதிர்வரும் 05ம்திகதி சனிக்கிழமை திருக்கோவில் மக்களின் திருவிழா, திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி. கஜேந்திரன் தலைமையிலும்,06 திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலையடிவேம்பு மக்களின் திருவிழா, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் தலைமையிலும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து செப்டெம்பர் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு வைரவர் பூசையுடன் மகோற்சவத்தின் சகல நிகழ்வுகளும் நிறைவடையவுள்ளன. மகோற்சவ விழாவில் பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாரின் திருவருளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

No comments

Subscribe Us