நாளை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!!!
(வி.ரி.சகாதேவராஜா)
மகாபாரத இதிகாச வரலாற்றைக் கூறும் இலங்கையின் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்
நாளை (08) செவ்வாய்க்கிழமை மாலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிறது.
10 ஆம் திகதி வியாழக்கிழமை மகாபாரத ஏடு திறந்து மகாபாரத பாராயணம் செய்தல் நிகழ்வு ஆரம்பமாகும்.
14 ஆம் திகதி திங்கட் கிழமை சுவாமி எழுந்தருளப்பண்ணலும், மறுநாள் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
நாட்கால் வெட்டுதலும் நடைபெறும்.
தொடர்ந்து 19 ஆம் திகதி சனிக்கிழமை கல்யாணக்கால் வெட்டுதலும் ,
23 ம் திகதி புதன்கிழமை வனவாசமும்,
24 ம் திகதி வியாழக்கிழமை தவநிலையும்
இடம்பெற்று, வெள்ளிக்கிழமை(25) மாலை தீமிதிப்பு வைபவம் இடம் பெற இருக்கின்றது .
மறு நாள் 26 ஆம் திகதி சனிக்கிழமை பாற்பள்ளையத்துடன் உற்சவம் நிறைவு பெறும்.
03.10.2026 சனிக்கிழமை 8ஆம் சடங்கு நடைபெறவுள்ளது.
தொடர்ச்சியாக 18 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவு பக்தர்கள் வருகை தருவது வழமையாகும்.
No comments