அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மகோற்சவம் ஆரம்பம்; அரச அதிபர் மங்கள பங்கேற்பு!
( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை நகரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவ விழா நேற்று முன்தினம் (04) வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக ஆரம்பமானது.
ஆலய பரிபாலன சபை தலைவர் எந்திரி கே.கருணநாதன் தலைமையில் நடைபெற்ற கொடியேற்ற திருவிழாவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சி மற்றும் அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் சுப்பிரமணியம் கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளாக எதிர்வரும் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு மாம்பழத் திருவிழாவும், 12ஆம் திகதி சனிக்கிழமை தெப்பத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.
13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10ஆம் நாள் திருவிழாவில் சுவாமி அம்பாறை நகர வீதி வலம் வரும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
மேலும், 14ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.
No comments