Column Left

Vettri

Breaking News

சம்பூரில் முழுமதி நாள் கலைவிழா .!




(சேனையூர் நிருபர்) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், மூதூர் பிரதேச செயலகத்தின் வழிகாட்டுதலில், சம்பூர் தமிழ் கலாமன்றமும் சம்பூர் ஆக்கலைக் கூடமும் இணைந்து ஏற்பாடு செய்த “முழுமதி நாள் கலைவிழா – 2026” நிகழ்வு (27.08.2026) தி/மு/ சம்பூர் மகாவித்தியாலயத்தின் திறந்தவெளி அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மூதூர் பிரதேச செயலாளர் எம்.ஐ. பிரணாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். வைத்திய கலாநிதியும் சம்பூர் தமிழ்க்கலாமன்றத்தின் தலைவருமான அ. ஸதீஸ்குமார் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலாபூஷணம் கா. ஜகனாதன் கலைபூஷணம் .பா. மதிபாலசிங்கம் கலாபூஷணம் க. யோகனந்தம் , பு. பிரபாகரன் (அதிபர், தி/மூ/ சம்பூர் மகாவித்தியாலயம்) அவர்களும், கு. ராஜரூபன் (சம்பூர் பத்திரகாளி ஆலய பரிபாலன சபையின் தலைவர்) அவர்களும் மற்றும் சோ. பாக்கியேஸ்வரன் (அதிபர், தி/மூ/சேனையூர் மத்திய கல்லூரி) ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் தமிழ் மக்களின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் சிறப்பாக அரங்கேற்றப்பட்டன. குறிப்பாக நடனம், பாடல், வில்லுப்பாட்டு, சிலம்பாட்டம், கவிதை, “ஒரு கதை – ஒரு சிந்தனை”, உடுக்குச் சிந்து மற்றும் நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகள் பார்வையாளர்களை கவரும் வகையில் சிறப்பாக நடைபெற்றன. மேலும், நிகழ்வில் பங்கேற்ற கலைஞர்கள் மற்றும் மாணவர்களின் திறமைகளைப் பாராட்டும் வகையில் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

No comments

Subscribe Us