இத்தாலியில் வசிக்கும் இலங்கை 8 வயது மாணவன் ரோய்ன்டன் றொபினற் 197 நாடுகளின் தகவல்களை அடையாளம் காட்டி உலக சாதனை படைத்துள்ளார்!!!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இத்தாலியில் வசித்து வரும் றொபினற் நேசராஜா மற்றும் கொலஸ்ரிக்கா ஆகியோரின் 8 வயது மகனான ரோய்ன்டன் றொபினற் உலகில் உள்ள 197 நாடுகளின் அமைவிடங்களை உலக வரைபடத்தில் துல்லியமாக அடையாளம் காட்டியதுடன், அந்தந்த நாடுகளின் தேசியக் கொடிகளை வைத்து, குறித்த நாட்டின் பெயர் மற்றும் அதன் தலைநகரத்தையும் சரியாகக் கூறி உலக சாதனை படைத்துள்ளார்.
இச் சாதனையானது இந்தியாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சோழன் உலக சாதனைப் புத்தகத்திலும் (Cholan Book of World Records), லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தி இன்டர்நேஷனல் அச்சீவ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸிலும் (The International Achiever Book of World Records) மாணவர் ரோய்ன்டன் ரொபினட் நேசராஜாவின் பெயர் பதிவு செய்யப்பட்டது.
இந்த உலக சாதனை நிகழ்வு இத்தாலியின் பலெர்மோ நகர மேயர் ரொபெர்டோ லகாலா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொலெர்மோ நகரத்தின் துணைத் தலைவர் பினோ மேன்கியூசோ முன்னிலை வகித்தார்.
மாணவர் கல்வி கற்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியா புராபாடோ மற்றும் பலெர்மோ நகரத்தின் தமிழ் மக்கள் பிரதிநிதி ரமணி தியாகராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்
உலக சாதனை படைத்த மாணவன் ரோய்ன்டன் ரொபினட் நேசராஜாவுக்கு பலெர்மோ நகர அரச நிர்வாகத்தின் சார்பில் சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டன.
மேலும், உலக சாதனை நிறுவனங்களின் சார்பில் சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், பதக்கங்கள், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் சாதனைப் பதிவுக் கோப்பு உள்ளிட்டவை வழங்கி மாணவன் கௌரவிக்கப்பட்டார்.
8 வயதிலேயே உலகின் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களைத் துல்லியமாக அடையாளம் காட்டி சாதனை படைத்த ரோஹின்டன் ரொபினட் நேசராஜாவை இத்தாலி நாட்டினரும் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் மக்களும் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்
இந்தச் சாதனை, சிறுவனின் அபாரமான
நினைவாற்றல், புவியியல் அறிவு மற்றும் தொடர்ச்சியான பயிற்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது
No comments