மஜீட்புர வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு வைர விழா!!!
(தில்சாத் பர்வீஸ்)
கமு/சது/மஜீட்புர வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு வைர விழா இன்று (15) காலை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
1966 செப்டெம்பர் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, ஆறு தசாப்தங்களாக ஆற்றிவரும் கல்விச் சேவையை நினைவுகூரும் வகையில் இந்த வைர விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாடசாலை அதிபர் வை.பி. முகம்மட் இஸ்மாயில் – JP (SLPS-I) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் கலந்துகொண்டனர்.
60 ஆண்டுகால கல்விப் பயணத்தின் வரலாறு மற்றும் சாதனைகளை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பாடசாலையின் வைர விழா ஆண்டில் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
No comments