தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வலய மட்டத்தில் முதலிடம்; அன்னை சாரதா மாணவிக்கு கௌரவம்.
(செல்வி வினாயகமூர்த்தி)
கடந்த வாரம் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், திருக்கோவில் கல்வி வலயத்தில் அதிகூடிய 173 புள்ளிகளைப் பெற்ற திகோ/அன்னை சாரதா கலவன் பாடசாலை மாணவி ரவிகரன் விஸ்வாதியாவைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (07) பாடசாலையில் நடைபெற்றது.
திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் ஆரம்பக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாதனை மாணவிக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்வில் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார், ஆரம்பக் கல்விப் பிரிவிற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. அம்ஜித்கான், ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் சோ. செல்வம், அன்னை சாரதா கலவன் பாடசாலை அதிபர் திருமதி கே. துளசிநாதன் உள்ளிட்ட ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வலய மட்டத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ள மாணவியின் சாதனையை கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டியதுடன், ஏனைய மாணவர்களுக்கும் இது சிறந்த ஊக்கமாக அமையும் எனத் தெரிவித்தனர்.
No comments