கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயம் 45 அகவையில்!!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டிக் கோட்டத்தில், தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயம் வெள்ளிக்கிழமை (11) தனது 44 ஆண்டு நிறைவை பூர்த்தி செய்வதுடன் 45 வது அகவையில் தடம் பதித்துள்ளது
இப்பாடசாலை 1982 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் திகதி எஸ் எம் ஜுனைதீன் அவர்களை அதிபராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
1982 09.13 ம் திகதி எஸ் எம். யூனுஸ் முதல் மாணவராக சேர்க்கப்பட்டார். 11 ஆண்கள் 12 பெண்கள் என 23 மாணாக்கர் முதல் தொகுதியில் சேர்க்கப்பட்டனர்.
கற்பிட்டி தில்லையடி ஜுமுஆப் பள்ளியான சிந்தா சேஹு மதார் சாஹிபு பள்ளிவாசலில் 1980 களில் இமாமாக கடமையாற்றிய சாலிபு லெப்பைஹ் காட்டுராஜா அப்பா மற்றும் பரிபாலன சபை பொறுப்பில் இருந்த மூத்த சகோதரர்களான எம்.எஸ்.எம்.ஷம்ஸுதீன், ப.கல்லடிப்பிச்சை, எஸ்.சத்தார், நா.முஹ்யுதீன் பிச்சை, எஸ்.எம்.இபுன், மூ.சேஹலாவுதீன் மரிக்காயர், மீ.கப்பமரிக்காயர், மீ.காசின் முஹ்யுதீன் ஆகியோர் ஒன்று கூடி கற்பிட்டி தில்லையடியிலும் ஒரு பாடசாலையை நிறுவ வேண்டும் என்ற சிந்தனையும் முன்னெடுப்புக்களும் மேற்கொண்டு எஸ்.எம்.ஜூனைத் ஆசிரியருடன் ஒன்றிணைந்து பள்ளிவாசல் வளாகத்தில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது
தற்போது இப்பாடசாலையின் அதிபராக இருக்கும் எஸ் எம் அரூஸ் 2009 காலப்பகுதியில் இப் பாடசாலைக்கான கீதத்தை இயற்றியுள்ளார். பாடசாலை இலச்சினையை வரைந்தவர் எச் எம் கலீல் ஓய்வு நிலை ஆசிரியர்
இப் பாடசாலையின் தற்போது அதிபராக கடமையாற்றும் அதிபர் எஸ் எம் அரூஸ் அவர்களின் முயற்சியினால் பாடசாலையின் 40 வது நிறைவு விழா தில்லை மலர்' என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments