ஆராச்சிக்கட்டு பிரதேசத்திற்கு அண்மையில் தீயணைப்பு வாகனம் விபத்து!!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
சிலாபம் நகர சபைக்குச் சொந்தமான தீயணைப்பு வாகனம், திங்கட்கிழமை (14) நண்பகல் முந்தல் நோக்கி விரைந்துகொண்டிருந்த வேளையில், ஆராச்சிக்கட்டு பிரதேசத்தை அண்மித்த பகுதியில் வைத்து திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வீதியிலேயே தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.
வீதியில் அஜாக்கிரதையாகவும் ஆபத்தான முறையிலும் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் சிறிய ரக லொறி ஒன்றையும் மோதிவிடக் கூடாது என்பதற்காக, தீயணைப்பு வாகனத்தின் சாரதி உடனடியாகத் திருப்பியுள்ளார். மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற எடுத்த இந்தத் துரித முயற்சியின் போது, வாகனம் நிலைகுலைந்து வீதியில் புரண்டது.
வாகனம் மிக மோசமாக விபத்துக்குள்ளான போதிலும், தீயணைப்புப் படையினர் நல்வாய்ப்பாக எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளமை பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஆராச்சிக்கட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
No comments