Column Left

Vettri

Breaking News

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்!!!




(நூருல் ஹுதா உமர்) அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வின் கீழ் நடைபெறவுள்ள “நடமாடும் சேவை மற்றும் வருமான மேம்பாட்டு நாள்” நிகழ்வுகள் இன்று (14) ஆரம்பித்து வைக்கப்பட்டன. காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில், காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் நிகழ்வுகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. “மக்களிடம் உள்ளூராட்சி – ஒரே இடத்தில் பல சேவைகள்” என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் இந்நிகழ்வின் ஊடாக பொதுமக்களுக்கு பல்வேறு உள்ளூராட்சி சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வியாபார அனுமதிப்பத்திரம், கடை வாடகை மற்றும் இதர வருமானங்கள், திண்மக்கழிவு முகாமைத்துவக் கட்டணம், வீதி எல்லைச் சான்றிதழ் மற்றும் கட்டிட அனுமதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம், பிறப்பு, இறப்பு பதிவுகள், அடையாள அட்டை பெறுதல், பொதுமக்கள் முறைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்நிகழ்வில் வழங்கப்படுகின்றன. பொதுமக்களை நேரடியாக அணுகி அவர்களின் தேவைகளை கேட்டறிந்து சேவைகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், பிரதேச சபை, பிரதேச செயலகம், பொலிஸ், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் பல பொது நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. இந்த தொடக்க நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ். பிரணரூபன், உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயீல், வை. கோபிகாந்த், ஏ.எம். ஜாஹீர், எம்.என்.எம். ரணீஸ், ஏ.ஆர்.எம். ஹில்மி, எ. பர்ஹான், எஸ். சிவகுமார், எஸ். செல்வராணி, அதிபர்கள், பிரமுகர்கள், சபை செயலாளர் வனிதா டேவிட் அமிர்தலிங்கம், சபை உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments

Subscribe Us