Column Left

Vettri

Breaking News

கிழக்கில் 17கல்விவலயங்களுள் திருக்கோவில் வலயம் முதலிடம் ! வலயக் கல்விப் பணிப்பாளர் உதயகுமார் பெருமிதம்!!!




( வி.ரி.சகாதேவராஜா) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 79.59 சதவீத சித்தியைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் 17 கல்வி வலயங்களுள் முதலாம் இடத்தை திருக்கோவில் வலயம் பெற்று சாதனை படைத்துள்ளது. கிழக்கில் இரண்டாம் இடத்தில் மட்டக்களப்பு வலயமும், மூன்றாம் இடத்தை அம்பாறை வலயமும், நான்காவது இடத்தில் தெகியத்த கண்டிய வலயமும் ஐந்தாவது இடத்தில் கல்முனை வலயமும் பெற்று முதல் ஐந்து இடங்களை அலங்கரிக்கின்றது. நேற்று இத்தரப்படுத்தல் பகுப்பாய்வு அறிக்கை வெளியானது. திருக்கோவில் கல்வி வலயத்தில் இம்முறை 169 மாணவர்கள் சித்தி பெற்று மீண்டும் கிழக்கில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்கள் என திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் இரா.உதயகுமார் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட மூன்று கோட்டங்களிலிருந்து மொத்தம் 882 மாணவர்கள் தோற்றிய நிலையில், 810 மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று 91.84 சதவீதத்தைப் பதிவு செய்துள்ளனர். கடந்த 2025ஆம் ஆண்டில் 124 ஆக இருந்த இச் சாதனை, இம்முறை 169 ஆக அதிகரித்துள்ளது. கோட்ட ரீதியாகப் பார்க்கும்போது, திருக்கோவில் கோட்டத்தில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் 57 இலிருந்து இம்முறை 90 ஆகவும், ஆலையடிவேம்பு கோட்டத்தில் 58 இலிருந்து 66 ஆகவும், பொத்துவில் கோட்டத்தில் 9 இலிருந்து 13 ஆகவும் அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துகள் தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Subscribe Us