பழைய காகிதக் கடைக்கு விற்கப்பட்ட பாடநூல்கள் கைமாறிய விதம் வௌியானது!!
விற்பனை:
இவ்வாறு பாடநூல்களை வாங்கிய நான்காவது சந்தேகநபர், அந்தத் தொகுதியை வத்தளையிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாகப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வத்தளையிலுள்ள அந்த நிறுவனம் பழைய காகிதங்கள், கார்ட்போர்டுகளைச் சேகரித்து இயந்திரங்கள் மூலம் வெட்டிப் பண்டல்களாக மாற்றி இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனமாகும். இதன் அடிப்படையில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முதலாவது சந்தேகநபரின் பழைய குற்றப் பின்னணி:
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய தலங்கம பொலிஸார், கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேகநபரான லொறி சாரதிக்கு எதிரான பல பழைய குற்றச்சாட்டுகளையும் வெளிக்கொண்டுவந்துள்ளனர்.
அதன்படி, கடந்த 2023 ஆம் ஆண்டு தொம்பே பொலிஸாரால் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதே ஆண்டின் நவம்பர் 28 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரிலும், அதே ஆண்டின் டிசம்பர் 12 ஆம் திகதி கொடூர விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் தொம்பே பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.
இதற்கமைய, கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும் பாடநூல்களை உரிய விநியோக மையத்திடம் ஒப்படைக்கத் தவறியமை, குற்றவியல் மோசடி செய்தமை மற்றும் அரச சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இன்று (15) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்
No comments