Column Left

Vettri

Breaking News

தலவில் கடற்கரையில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட உலர்ந்த இஞ்சி, ஏலக்காய் உமி மற்றும் பூச்சிக்கொல்லி திரவங்களை கைப்பற்றிய கடற்படை!!




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) இலங்கை கடற்படையினரால் கற்பிட்டி, தலவில கடற்கரைப்பகுதியில் வியாழக்கிழமை (2026 ஆகஸ்ட் 20) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட உலர்ந்த இஞ்சி, ஏலக்காய் உமி மற்றும் பூச்சிக்கொல்லி திரவம் அடங்கிய போத்தல்கள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படை கட்டளை​க்குச் சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் பரண நிறுவனத்தால் தலவில கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்கரையில் கைவிடப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பதினாறு (16) பொதிகள் பரிசோதிக்கப்பட்டன. இதன்போது, அப் பொதிகளுக்குள் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஐந்நூற்று தொண்ணூற்றொரு கிலோகிராம் (591) உலர்ந்த இஞ்சித் துண்டுகள், எழுபத்தைந்து கிலோகிராம் (75) ஏலக்காய் உமி மற்றும் முந்நூறு (300) பூச்சிக்கொல்லி திரவப் போத்தல்கள் என்பன கண்டெடுக்கப்பட்டன. இதன்படி, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட குறித்த பொருட்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

No comments

Subscribe Us