Column Left

Vettri

Breaking News

மறைந்த ஆயுர்வேத வைத்தியர் மா. ஜெயநாதனின் நினைவாக மாலைநேர சிறப்பு வகுப்புகள்: வளத்தாப்பிட்டியில்!!




"இணைந்த கரங்கள் உறவுகள்” ஊடாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து உழைத்து வரும் "இணைந்த கரங்கள்" (Inaintha Karangal) புதியதொரு கல்வித் திட்டத் தொடக்க நிகழ்வு வளத்தாப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாக (08) இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது "இணைந்த கரங்கள்" அமைப்போடு இணைந்து ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நீண்டகாலமாகப் பல்வேறு உதவிகளை வழங்கி வந்தவரும், அண்மையில் காலமானவருமான மறைந்த ஆயுர்வேத வைத்தியர் மார்க்கண்டு ஜெயநாதன் அவர்களின் நினைவாக இப்புதிய கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வளத்தாப்பிட்டி அரசினர் கலவன் வித்தியாலய அதிபர் திரு. தர்ச்சானந் அவர்களின் உத்தியோகபூர்வ வேண்டு கோளுக்கிணங்க, தரம் 10 மற்றும் தரம் 11 மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மாணவர்களுக்கு மிகவும் அவசியமான கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான மாலைநேர சிறப்பு வகுப்புகள் "இணைந்த கரங்கள்" அமைப்பின் முழுமையான நிதிப் பங்களிப்புடன்,வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வளத்தாப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், "இணைந்த கரங்கள்" அமைப்பின் பிரதிநிதிகளாக அதிபர்.திரு. வித்தியானந்தம், காந்தன், கஜன், அதிபர் திரு.தியாகு, சீனு, சனாதனன், ஜெயக்காந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் அமரர் வைத்தியர் மா. ஜெகநாதன் அவர்களின் குடும்பத்தின் சார்பாக அவரது உறவினர் திருமதி.மோகனசுந்தரி பத்மநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்." ஏழ்மையை ஒழிப்போம், கல்வியை விதைப்போம்!" எனும் உன்னத தாரக மந்திரத்தோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சிறப்பு வகுப்புகளின் ஆரம்ப நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர். மறைந்த மாமனிதரின் சேவைப் பாதையில், மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் நோக்கில் இத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments