கற்பிட்டி மண்டலக்குடா கடற்பரப்பில் வல்லம் கவிழ்ந்து சிறு பிள்ளைகள் இருவர் உயிரிழப்பு!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி மண்டலக்குடா கடற்பரப்பில் குரக்கஞ்சேனையில் வசிக்கும் தந்தை தனது இரு பிள்ளைகளுடன் வல்லத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேலை வல்லம் கவிழ்ந்ததில் இரு பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் தந்தை காப்பாற்றப்பட்டு கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (11) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த சிறுவர்கள் 05 மற்றும் 15 வயதை உடையவர்கள் எனவும் மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது
No comments