Column Left

Vettri

Breaking News

சமுர்த்தி பயனாளிகளுக்கு தையல் இயந்திர தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் திருத்தம் தொடர்பான பயிற்சி!!





(மருதமுனை செய்தியாளர்  றாசிக் நபாயிஸ்)


கல்முனை சமுர்த்தி பிரிவினால் சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் 2025ம் ஆண்டில் தையல் இயந்திரம் கொடுக்கப்பட்ட பயனாளிகள் மற்றும் 2026ல் தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ள பயனாளிகளுக்கான

தையல் இயந்திர தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் திருத்தம் தொடர்பான பயிற்சி நெறி கல்முனை பிரதேச செயலகத்தின் ஸ்மார்ட் மண்டபத்தில் பிரதேச செயலாளர் 

சட்டத்தரணி அஷ்-ஷெய்க் ரி.எம் எம். அன்சார் அவர்களின் தலைமையில் (06) நடைபெற்றது.

இப்பயிற்சி நெறியை எம்.டீ. பாயிஸ் அவர்கள் ன வளவாளராகக் கலந்து செயன்முறை பயிற்சிகளுடன் தெளிவூட்டல்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் கல்முனைப் பிரதேச செயலாளர் தலைமை பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி. அன்வர்,  முகாமைத்துவ பணிப்பாளர் அம்சார் மற்றும் கருத்திட்ட முகாமையாளர் அஸீஸ் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

No comments

Subscribe Us