Column Left

Vettri

Breaking News

புதிய வளத்தாப்பிட்டியில் டெங்கு தடுப்பு: வீடு வீடாக சுகாதார ஆய்வு.!!




 

(களத்திலிருந்து மின்மினி மின்ஹா)


டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய வளத்தாப்பிட்டியில் வீடுகள் தோறும் சுகாதார ஆய்வு மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இன்று (10) இடம்பெற்றன.


சிலோன் பிரிட்டிஷ் கல்லூரி, Voice of Future Sri Lanka, Change for Student Community ஆகியவற்றின் நிறுவுனரான வெள்ளையன் வினோத்காந்த், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளராகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளராகவும், அக்கட்சியின் கல்வி அபிவிருத்திப் பிரிவின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.வெள்ளையன் வினோத்காந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அறம் அமைப்பு, Voice of Future Sri Lanka, மாற்றத்திற்கான மாணவர்கள் அமைப்பு உள்ளிட்ட பத்து அமைப்புகள் இணைந்து செயற்பட்டன.


கிராமத்தின் ஐந்து பிரதான வீதிகளில் 1.கண்ணகி வீதி 

2.அம்மன் வீதி 

3.மத்திய வீதி 

4.விபுலானந்த வீதி 

5.ஸ்ரீ நாகதம்பிரான் வீதி ஆகியவற்றில் காணப்பட்ட வீடுகள் பரிசோதிக்கப்பட்டதுடன், டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றை அகற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.


சுகாதார ஆலோசனைகளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எம்.எஸ். டீ. அத்தநாயக்க மற்றும் கிராம சேவகர் எம். உதயராஜன் வழங்கினர்.


சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தலைமையிலான ஊழியர்கள் வாகனங்களுடன் இணைந்து நடவடிக்கைக்கு ஒத்துழைத்தனர்.

No comments

Subscribe Us