Column Left

Vettri

Breaking News

கடற்படை தளபதி சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சரை சந்தித்தார்!!




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ திங்கட்கிழமை (2026 ஆகஸ்ட் 17) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸவை சுகாதார அமைச்சில் சந்தித்தார். இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் இலங்கை கடற்படை ஆற்றும் பங்களிப்பு உட்பட பல விடயங்கள் குறித்து கடற்படை தளபதிக்கும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருக்கும் இடையே சுமூகமான பேச்சுவார்த்தை இடம்பெற்றது. மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில், கடற்படை தளபதியினால் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

No comments

Subscribe Us