Column Left

Vettri

Breaking News

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்!!




(நூருல் ஹுதா உமர்) அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா உத்தியோகபூர்வமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை மேயருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் முன்னிலையில் எம்.எச். சுபைதா உம்மா தனது பதவிப் பிரமாணத்தை மேற்கொண்டார். இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். அஸ்ஹர், முன்னாள் தவிசாளர் எம்.ஏ. ராஷிக், அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் ஹையு, தேசிய காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் வசீர் எம் ஜுனைட் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும், அக்கரைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எல்.எம். இர்பான், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சபை உறுப்பினர்கள் எம்.எச். பைறூஸ், எம். இத்ரிஸ் உள்ளிட்டோரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்களான எம்.நஜிமுடீன், ஏ.எல்.எம்.பாஹிம் உள்ளிட்டோரும், தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் சுபைதா உம்மாவின் குடும்ப உறுப்பினர்களும் நிகழ்வில் பங்கேற்றனர். இதன்போது, தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை மேயருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் மற்றும் புதிய உதவித் தவிசாளர் எம்.எச். சுபைதா உம்மா ஆகியோருக்கு சுபைதா உம்மாவின் குடும்பத்தினரால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அக்கரைப்பற்று பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உறுப்பினராக அங்கம் வகிக்கும் எம்.எச். பைறூஸ் அவர்களின் சகோதரியே புதிய உதவித் தவிசாளர் எம்.எச். சுபைதா உம்மா என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய உதவித் தவிசாளராக பதவியேற்றுள்ள எம்.எச். சுபைதா உம்மாவுக்கு அரசியல் பிரமுகர்கள், சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

No comments

Subscribe Us