Column Left

Vettri

Breaking News

ஆரோஹி திரைப்படம் திருகோணமலை திரையரங்கில்!




(அபு அலா) கிழக்கு மாகாண - திருகோணமலை மாவட்ட கலைஞர்களினால் நடிக்கப்பட்ட ஆரோஹி AAROHI தமிழ் திரைப்படம் 3 வது முறையாக இன்று (23) நெல்சன் திரையரங்கில் பொதுமக்களது பாராட்டு மற்றும் வரவேற்புக்கு மத்தியில் திரையிடப்பட்டது. இதனை பார்வையிட்ட ரசிகர்கள், திரைப்படக் குழுவினரின் முயற்சி அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றல் முழுவதும் இந்திய திரைப்படங்களைப் போன்றதாக இருந்தது என்று பாராட்டி மகிழ்ச்சியடைந்தன். 20 வருட கலைத்துறையில் அனுபவம் பெற்ற தொழிலதிபர் சமூக செயற்பாட்டாளர் குமார் ஜெயகுமார் MBA, BSc (Hons) ஆரோஹி AAROHI திரைப்படம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், இளம் திறமையாளர்களின் உழைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது என்றும் இத்திரைப்படத்தின் கதை, நடிப்பு, இசை மற்றும் காட்சியமைப்பில் அக்குழுவினர் வெளிப்படுத்தியுள்ள ஆர்வமும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது என்று பாராட்டுத் தெரிவித்தார். குறிப்பாக, எமது சமூகத்தைச் சேர்ந்த இளம் கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களை ஊக்குவிப்பது எம் அனைவருடைய பொறுப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆரோஹி AAROHI திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது குடும்பத்துடன் சென்று திரைப்படத்தை பார்த்து, இந்த இளம் படைப்பாளர்களுக்கு ஆதரவு வழங்குமாறு வட கிழக்கு மக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொண்டார். இந்த திரைப்படத்தை வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரையிடவுள்ளதாகவும், குறிப்பாக, எமது நாட்டின் தலைநகரிலும் திரையிடவுள்ளோம் என்றும் தெரிவித்தார். இந்த திரைப்படத்தை பார்ப்பது மட்டுமல்ல; எமது சமூகத்தில் உருவாகி வரும் புதிய கலைஞர்கள், நடிகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் திரைப்படத் துறையினருக்கு நாம் வழங்கும் ஒரு முக்கியமான ஆதரவாகும் என்றும் குறிப்பிட்ட அவர், ஆரோஹி AAROHI திரைப்படக் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்ற அதேவேளை, அவர்களின் எதிர்காலப் படைப்புகள் மேலும் வெற்றியடையவும், சர்வதேசளவில் பல வாய்ப்புகளைப் பெறவும், அவர்களுக்கு மட்டுமல்ல புதிய கலைஞர்கள், நடிகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் திரைப்படத் துறையினருக்கு தி ன்னாலான உதவிகளைச் செய்ய தயாராக இருக்கிறேன் என்றும் தொழிலதிபர் சமூக செயற்பாட்டாளர் குமார் ஜெயகுமார் MBA, BSc (Hons) தெரிவித்தார். வாழ்த்துக்கள் AAROH! குழுவினரே — உங்கள் பயணம் வெற்றிகரமாக தொடரட்டும்.

No comments

Subscribe Us