Column Left

Vettri

Breaking News

அதே ஆடையுடன் வேறு வைத்தியசாலையில் பணியாற்ற முடியுமானால், கல்முனையில் ஏன் முடியாது?” – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி முஅஸ்ஸம் கேள்வி!!




கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சீருடை விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய அலுவலகத்தில் தீவிர விசாரணை ■ அரசியலமைப்பு உரிமைகளை சுற்றறிக்கைகளைக்காட்டி மறுக்க முடியாது: சுகாதார அமைச்சிடம் நிரந்தரக் கொள்கைத் தீர்மானத்தைக் கோருகிறது சட்டத்தரணிகள் தரப்பு (பாறுக் ஷிஹான்) video link- https://fromsmash.com/VTPo1fvW1w-dt கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் சுகாதாரப் பணியாளர்களின் சீருடை விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் விசாரணை இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட பணியாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம், "குறித்த ஆடை அனுமதிக்கப்படாத ஒன்றாக இருந்தால், அதே ஆடையுடன் அவர்கள் வேறு அரச வைத்தியசாலையில் எவ்வாறு பணியாற்ற முடியும்? அவ்வாறாயின் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த முடியாத தனி மண்டலமாகவா கல்முனை ஆதார வைத்தியசாலை தொழிற்படுகிறது?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும், அரச தாபன விதிக்கோவை மற்றும் சுற்றறிக்கைகளை மட்டும் மேற்கோள் காட்டி அதிகாரிகள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து விலகிவிட முடியாது என்றும், தாதியர் உள்ளிட்ட ஏனைய பணியாளர்களுக்கும் இப் பிரச்சினை விரிவடையும் முன் சுகாதார அமைச்சு தேசிய மட்டத்திலான நிரந்தரக் கொள்கைத் தீர்வை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், இச் சம்பவத்தைச் சாதகமாகப் பயன்படுத்திச் சமூக வலைத்தளங்களில் இனவாதக் கருத்துக்களையும் போலிப் பிரசாரங்களையும் பரப்புவதைத் தவிர்த்துப் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

No comments

Subscribe Us