ஒன்பது முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களுக்கும் இடமாற்றக் கடிதம் கையளிப்பு!!
( வி.ரி. சகாதேவராஜா)
இன்று இலங்கையில் பேசுபொருளாக உள்ள கல்முனை ஆதார வைத்தியசாலையின் சீருடை சர்ச்சையில் சிக்கிய 9 முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களுக்கான இடமாற்றக் கடிதங்கள் நேற்று (18) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் கையளிக்கப்பட்டது .
கல்முனை ஆதாரவைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் பி. ஸ்ரீ சங்கர் அந்த கடிதங்களை நேற்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கல்முனை காரியாலயத்தில் நடைபெற்ற விசாரணையின் பின்பு வந்து, பிற்பகல் 5 மணியளவில் அவர்களுக்கு கையளித்தார்கள் .
சுகாதார அமைச்சின் சேவையின் தேவை கருதிய இந்த உடனடி இட மாற்றத்தை பிரதிபணிப்பாளர் டாக்டர் பி.ஸ்ரீ சங்கர், 9 பேருக்கும் தனித்தனியாக கையளித்தார்கள் .
அவர்கள் இன்று (19) புதன் கிழமை கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலையிலே கடமையை பொறுப்பேற்றார்கள்.
No comments