Column Left

Vettri

Breaking News

புத்தளத்தில் இடம்பெற்ற ஐந்து நபர்களுக்கு மேற்பட்ட குழுக்கள் தொடர்பில் அரசின் புதிய சட்ட வரைபு தொடர்பான தெளிவூட்டல்





(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)


புத்தளம் “விழுது” மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில், புத்தளம் பிரதேசத்தில் இயங்கிவரும் சமூக சேவையாளர்கள், தன்னார்வ சங்க உறுப்பினர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கான அரசின் புதிய சட்ட வரைபு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் அரச சார்புடைய நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் தொடர்பாக தற்போதைய அரசு முன்வைதுள்ள புதிய சட்ட வரைபு மற்றும் சட்ட ஏற்பாடுகள் அதன் பாதகத் தன்மை குறித்து விரிவாக தெளிவூட்டப்பட்டது.

குறிப்பாக, இவ்வாறான நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் சட்ட ரீதியான நிலை, பதிவு செய்வதற்கான நடைமுறைகள், அவற்றின் பொறுப்புகள் மற்றும் செயற்பாடுகளுடன் தொடர்புடைய சட்ட விடயங்கள் அரசின் புதிய சட்ட வரைபு தொடர்பான விளம்பரங்களும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது 

இந்நிகழ்வின் வளவாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் கலந்துகொண்டு அரசின் புதிய சட்ட வரைபு தொடர்பான விரிவான விளக்கங்களை வழங்கினார்.

புத்தளம் பிரதேசத்தில் சமூக சேவை மற்றும் தன்னார்வப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தமது அமைப்புகளின் செயற்பாடுகளை புதிய  சட்ட வரைபு எவ்வாறான தாக்கங்களை செலுத்தும் தொடர்பாகவும் தற்போதைய சூழ் நிலையில் மேற்படி புதிய சட்ட வரைபு அவசியம் அற்றது என்பதுடன் கிராமங்களில் உள்ள சிறிய சமூக தொன்றாற்றுகளை செய்து வரும் குழுக்களின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலேயே இப் புதிய சட்ட வரைபு காணப்படுகின்றமை தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

No comments

Subscribe Us