Column Left

Vettri

Breaking News

இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு புதிய மேலதிக மாவட்ட பதிவாளர் கடமையேற்பு.!!




(நூருல் ஹுதா உமர்) இறக்காமம் பிரதேச செயலகத்தில் நீண்டகாலமாக வெற்றிடமாகக் காணப்பட்ட மேலதிக மாவட்ட பதிவாளர் பதவிக்கு, அண்மையில் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து புதிதாக நியமனம் பெற்ற மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.எம். சுஜாத் அவர்கள், 2026.08.17 திங்கட்கிழமை, இறக்காமம் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் அஷ்-ஷெய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் (நளீமி) அவர்களின் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லாஹ், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், நிருவாக உத்தியோகத்தர் ஐ.எல்.எம். றசாக் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும், புதிதாக நியமனம் பெற்ற மேலதிக மாவட்ட பதிவாளர் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன்போது, புதிய பதவியில் சிறப்பாகப் பணியாற்றி, பொதுமக்களுக்கு சிறந்ததும் வினைத்திறன்மிக்கதுமான சேவையை வழங்க எஸ்.எம். சுஜாத் அவர்களுக்கு பிரதேச செயலாளர் அவர்கள் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

No comments

Subscribe Us