Column Left

Vettri

Breaking News

ஆலையடிவேம்பில் பிரஜைகள் சாசனம் தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு!!




(செல்வி வினாயகமூர்த்தி) ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் பொதுமக்கள் அரச சேவைகளை இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், பிரஜைகள் சாசனம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (19) புதன்கிழமை நடைபெற்றது. ஆலையடிவேம்பு சமூகமட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) நிதி அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வு, ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை ஆகிய இரு இடங்களில் இடம்பெற்றது. பொதுமக்கள் தமக்குரிய அரச சேவைகள், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் மற்றும் தேவையான தகவல்கள் தொடர்பில் அறிந்துகொள்ளும் வகையில், இரு இடங்களிலும் ஸ்மார்ட் தொலைக்காட்சி (Smart TV) ஊடாக விழிப்புணர்வுத் தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், பிரஜைகள் சாசனம் தொடர்பான பெயர்ப்பலகைகளும் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கவடாப்பிட்டி கண்ணகிபுரம், அலிக்கம்பை உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளில் இருந்து சேவைகளைப் பெற வருகை தரும் பொதுமக்களுக்கு பிரஜைகள் சாசனம் தொடர்பான தகவல்களை இலகுவாக அறிந்துகொள்ளச் செய்வதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ், உதவிப் பிரதேச செயலாளர் மா. ராமக்குட்டி, பிரதேச சபை தவிசாளர் ஆர். தர்மதாச, செயலாளர் எஸ். திவாகரன், Search for Common Ground நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் எம்.ஐ.எம். சதாத் உள்ளிட்ட பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சமூகமட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments

Subscribe Us