Column Left

Vettri

Breaking News

பெரிய நீலாவனை பாடசாலையில் மாலை நேர வகுப்பினை ஆரம்பித்த இணைந்த கரங்கள்...




பெரியநீலாவனை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் "இணைந்த கரங்கள் உறவுகளின் “ கல்விப் பயணமானது வறுமையின் காரணமாக எமது பிள்ளைகள் கல்வியில் பின்தங்கிவிடக் கூடாது என்ற உன்னத நோக்கில், இன்று (23.08.2026) ஞாயிற்றுக்கிழமை கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் தரம் 10 மற்றும் தரம் 11 மாணவர்களுக்கான மாலை நேரக் கணித மற்றும் விஞ்ஞானம் ஆகிய இரு பாடங்களுக்கான தொடக்க விழா மிகச் சிறப்பாகவும் உணர்வுபூர்வமாக பாடசாலையின் அதிபரின் வழிகாட்டலுடன் உப அதிபர் - திரு . L. பற்குணராசா அவர்கள் தலைமையில் இடம்பெற்றிருந்தது. பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட 74 மாணவச் செல்வங்களும், அவர்களின் பெற்றோர்களும், பாடசாலை ஆசிரியர்களும், அதிபர் அவர்களும் கலந்துகொண்டு எமது இந்த முயற்சிக்குத் தங்களின் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர். இணைந்த கரங்கள் உறவுகள் ஊடாக பல உதவிகளை வழங்கி வரும் திரு.கனகுராஜ் அவர்கள் இந்த திட்டத்துக்கு நிதி உதவி வழங்க முன்வந்துள்ளார். இந் நிகழ்வில் கல்முனை கல்வி வலய தமிழ் பிரிவிற்கான கோட்டக்கல்வி பணிப்பாளர் - திரு . S. சுரேஸ் அவர்கள் அதிதியாக கலந்து சிறப்பித்தார். மேலும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர், வளவாளர், இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

No comments

Subscribe Us