Column Left

Vettri

Breaking News

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பெருந்தொகை மருந்து மாத்திரைகள் புத்தளம் களப்பில் கைப்பற்றிய கடற்படை!!




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) இலங்கை கடற்படையினர், புத்தளம் களப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (2026 ஆகஸ்ட் 18) மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் (750,000) மருந்து மாத்திரைகளைக் கொண்ட டிங்கி படகொன்றை (01) சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளனர். இதற்கமைய, வடமேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனத்தினால் புத்தளக் களப்புப் பகுதியை உள்ளடக்கியதாக செவ்வாய்க்கிழமை (2026 ஆகஸ்ட் 18) விசேட சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கடற்படையினரின் நடவடிக்கையைத் தொடர்ந்து கைவிடப்பட்டுச் சென்ற சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றையும் அதிலிருந்த பெருந்தொகை மருந்து மாத்திரைகளையும் கடற்படையினரால் கண்டெடுக்க முடிந்தது. மேலும், இந்த டிங்கி படகும் பெருந்தொகை மருந்து மாத்திரைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

No comments

Subscribe Us