பெண்களின் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க தயாராக உள்ளேன்!!
பெண்கள் விளையாட்டுத் துறையில் சாதிப்பதற்கான முயற்சிகளுக்கு தன்னாலான உதவிகளை வழங்கத் தயாராக இருக்கின்றேன் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பிரமுகர் சமூக சேவையாளர் குமார் ஜெயகுமரன் தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் இளம் பெண்கள் விளையாட்டுத் துறையில் முன்னேறுவதற்கு தேவையான வாய்ப்புகளையும் ஊக்கத்தையும் வழங்குவது எமது சமூகத்தின் முக்கிய பொறுப்பாகும். பெண்கள் பல்வேறு வகையான விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதில் நான் பெருமை கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.
பெரிய குளம் பாரதி மகளிர் விளையாட்டு கழகத்தின் ஒரு பகுதியாக இருந்து, எமது பகுதியைச் சேர்ந்த பெண்கள் அனைத்து வகையான விளையாட்டு நடவடிக்கைகளிலும் முன்னேறுவதற்கும், பெண்களின் திறமைகளை ஊக்குவிப்பதும், அவர்களுக்கு தேவையான வாய்ப்புகளை உருவாக்குவது முக்கியமாகும் என்றார்.
No comments