Column Left

Vettri

Breaking News

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!!




நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பதிவான மொத்த நோயாளர்களில் 52.94% அதாவது 47,136 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே கண்டறியப்பட்டுள்ளனர். மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அங்கு 18,922 நோயாளர்கள் (21.25%) பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 17,679 நோயாளர்களும் (19.86%), கண்டி மாவட்டத்தில் 6,298 நோயாளர்களும் (7.07%) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தவிர, கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் 3,569 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன், கடந்த ஜூலை மாதத்தில் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,973 ஆகும். இதேவேளை, ஆகஸ்ட் மாதத்தின் முதல் 7 நாட்களில் மட்டும் 3,686 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், 119 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளை சுகாதாரப் பிரிவினர் தொடர்ந்து டெங்கு அதி-அபாய வலயங்களாகப் பெயரிட்டுள்ளனர்.

No comments

Subscribe Us