Column Left

Vettri

Breaking News

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்த உற்சவத்தின் 14ம் நாள் திருவிழாவானது 2026.08.08ம் திகதி சனிக்கிழமை அன்று அரச உத்தியோகத்தர்களினால் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.




(ஜே.கே.யதுர்ஷன்) தம்பிலுவில்.. கிழக்கிலங்கை அம்பாறை மாவட்ட திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவ திருவிழாவில் அரச உத்தியோகத்தர்களின் திருவிழாவானது திருக்கோவில் பிரதேச செயலாளர் T. கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது இவ் திருவிழா நிகழ்வைச் சிறப்பிக்கும் முகமாக திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் R. உதயகுமார் அவர்களின் தலைமையில் நடன ஆசிரிய ஆலோசகர், நடன ஆசிரியர்கள், நாடக ஆசிரியர்களின் நெறிப்படுத்தலிலும் திருமதி வனிதா சுரேஸ் (அழகியல் பாட இணைப்பாளர்)அவர்களின் உந்துசத்தியுடனும் 1000 மாணவர்களின் நாத நர்தன கலை நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வின் வீதி ஊர்வலத்தில், பாலமுருகன், மயில்கள் அசைந்து வர,கிராமிய கலை வடிவங்களை மாணவர்கள் ஆடி வர, ஊர் மக்களுக்கு நிகழ்ச்சி பற்றிய எடுத்துக்கூறலுடன் ஊர்தியில் அழகிய வேல் எடுத்துவரப்பட்டது. ஆலயத்தில் இசைக்கச்சேரி சங்கீத பாட ஆசிரிய ஆலோசகர், ஆசிரியர்கள், இசைக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது. ஆலய வீதியில் 1000 மாணவர்களை உள்ளடக்கி கட்டியம் கூறி நடன நிகழ்வானது வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பிகப்பட்டது. பாலமுருகன் உட்பட முருகனின் ஏனைய வடிவங்களான ஞான முருகன், முதிர் முருகன், ஆண்டி முருகன், அழகு முருகன், வள்ளி தெய்வானை சமேதர முருகன் என பாத்திரமேற்று ஆலய வீதியெங்கும் சுற்றி வந்தது அனைவரையும் பத்தி பரவசத்திற்குட்படுத்தியது. இத்திருவிழாவினை சிறப்பிக்கும் முகமாக இந்நிகழ்வானது இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ்மா அதிபர் DIG சுஜித் வெதமுல்ல மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் திருக்கோவில் பிரதேச சபை கௌரவ தவிசாளர் S.சசிகுமார் திருக்கோவில் பிரதேசத்திற்கு பொறுப்பான உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் திரு.தயாரத்ன திருக்கோவில் பிரதேச செயலக உதவிச்செயலாளர், இந்து கலாசார உத்தியோர்த்தர்கள், திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய பரிபாலன சபை தலைவர் திரு.சு.சுரேஸ் உட்பட ஆலய நிர்வாகத்தினர் அரச உத்தியோத்தர்கள், மாணவர்கள், பொற்றோர்கள், பொது மக்கள் என பலரும் கலந்தது சிறப்பித்தனர். அத்துடன் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய தொண்டர் குழுவினரால் தாக சாந்தி நிகழ்வும் இடம்பெற்றது... மேலும் இவ் நிகழ்விற்கு அயராது பாடுபட்ட அனைத்து மாணவர்கள் ஆசிரியர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் அரச உத்தியோதர் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் திருக்கோவில் பிரதேச செயலாளர் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார் ..

No comments

Subscribe Us