ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு ஒஸ்காரின் விளையாட்டு உபகரணங்கள்!
(
வி.ரி. சகாதேவராஜா)
அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), சம்மாந்துறை வலயத்திலுள்ள ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு, ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை நேற்று(24) வெள்ளிக்கிழமை வழங்கி வைத்தது.
ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் எஸ்.இளங்கோபன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில், பிரதம அதிதியாக அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் மக்கள் ஒன்றியத்தின் (ஒஸ்காரின்) முன்னாள் தலைவர் கந்தசாமி பத்மநாதன் அவுஸ்திரேலியாவில் இருந்து வருகைதந்து கலந்து சிறப்பித்தார்.
"ஒஸ்கார்" ( AusKar) அமைப்பின் தலைவர் ரத்தினசிங்கம் பிரதீபராஜ் வழிநடத்தலில், "ஒஸ்கார்" அமைப்பின் ஸ்தாபக உறுப்பினரும் பொருளாளரும் இணைப்பாளருமான தம்பியப்பா கணேசநாதன் இதற்கு அனுசரணை வழங்கினார்.
நட்சத்திர அதிதியாக, ஒஸ்கார் அமைப்பின் பிரதிநிதியும், ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளரும், பிரபல ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா கலந்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில், மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில், ஒஸ்கார் பிரதிநிதியும் மல்வத்தை விபுலானந்தா அதிபருமான இ.ரத்னகுமார், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் வி.மோகன் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கேஎல்எம்.ஷக்கி, மற்றும்,ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பிரதி அதிபர் க.மோகனராசு நன்றியுரையாற்றினார்.
"ஒஸ்கார்" அமைப்பினர் கடந்த 15 வருடங்களாக இன்னொரன்ன பல சேவைகளை காரைதீவில் மட்டுமல்லாமல், அம்பாறை மாவட்ட தமிழ் கிராமங்களிலும் பொலனறுவை மற்றும் பூண்டுலோயா உள்ளிட்ட மலையகத்திலும் செய்து வருகின்றார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments