Column Left

Vettri

Breaking News

சைவா மற்றும் ஸ்பாண்ட் அமைப்பினரின் அடியார்களுக்கான உன்னதமானசேவை!!




( வி.ரி.சகாதேவராஜா) உகந்தைமலை முருகன் ஆலயத்தில் இருந்து தினமும் புறப்படும் கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு குமுக்கன் வரைக்கும் பிரதேசத்தில் குளிர்பானம் மற்றும் குடிநீர் ஆகியவற்றை சைவா( Saiva) அமைப்பு மற்றும் ஸ்பான்ட்(Spand) அமைப்பினர் இணைந்து தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார்கள். கடந்த 8 நாட்களாக குமுக்கன் கானகத்தில் முகாமிட்டிருக்கும் இந்த அமைப்புகளின் தொண்டர்கள்,இந்த மனிதாபிமான பாரிய பணியை இரவு பகலாக செய்து வருகின்றார்கள். நேற்று கொழுத்தும் வெயிலிலும் அடியார்கள் நலன்கருதி சிரமங்களுக்கு மத்தியில் சேவை புரிந்து வருகிறார்கள். அதேவேளை குமுக்கனில் இரவில் தங்கி காலையில் அடியார்கள் சென்ற பின்பு அங்கு இருக்கக்கூடிய பிளாஸ்டிக் மற்றும் ஏனைய கழிவுகள் அனைத்தையும் ஒவ்வொரு நாளும் இந்த சைவா ஸ்பான்ட் தொண்டர்கள் அகற்றி சுத்தம் செய்து வருகின்றார்கள். இதைவிட அவசர வைத்திய சேவைக்காக தங்களது வாகனத்தையும் ஈடுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us