ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயத்தில் சந்திரகாந்தி பவுண்டேசன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் புனரமைக்கப்பட்ட ஆறு மலசலகூடங்கள் பாடசாலையின் பாவனைக்காக நேற்று அதவாது திங்கட் கிழமை உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது!!
அதிபர் இ.தவராசா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சந்திரகாந்தி பவுண்டேசன் அமைப்பின் இணைப்பாளர் மேவின் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலையில் மிக நீண்டகாலமாக நிலவிவந்த இப் பிரச்சினையினையை வித்தியாலய அதிபர் அவர்கள் சந்திரகாந்தி பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகர் பிரபாகரன் அவர்களிடம் விடுத்த வேண்டு கோளிற்கு இணங்க, ஆசிரியர்களுக்கு இரண்டு மலசல கூடங்களும் மாணவர்களுக்கு நான்கு மலசலகூடங்களும் நிறுவனத்தினரினால் பல இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. மேலும் குறித்த நிறுவனத்தினரிடம் பாடசாலையில் மகிழ்வான கற்றல் சூழலை உருவாக்கும் முகமாக சிறுவர் பூங்கா ஒன்றினை அமைத்து தருமாறு கோரி மாணவர்கள் மகஜர்;;;;;;;; ஒன்றினையும் கையளித்திருந்தனர். இதற்காக அதிபர், ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் இதன்போது நன்றி தெரிவித்தனர்…..
No comments