Column Left

Vettri

Breaking News

அம்பாறையில் ரகசியமாக இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: பெண் உட்பட இருவர் கைது!!!




பாறுக் ஷிஹான் அம்பாறை நகரில் தங்குமிடம் ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளதுடன் அங்கு முகாமையாளராக பணியாற்றிய நபர் உட்பட பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர். அம்பாறை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து உளவாளி ஒருவரைப் பயன்படுத்தி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட பொறி நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட விடுதி முகாமையாளர் அக்கரைப்பற்றுப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருடன் கைது செய்யப்பட்ட பெண் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் இருவரையும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகளை இன்று அம்பாறை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்லவின் நேரடி வழிகாட்டலில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி, அம்பாறை பிரிவு 1 உதவி பொலிஸ் அதிகாரி சம்பத் விக்கிரமரத்ன, அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் அம்பாறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி எச்.எம்.எஸ்.டி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us