கோட்டைக்கல்லாற்றில் அப்பக்கடையுடன் மோதிய முச்சக்கரவண்டி!!!!
பழுகாமம் நிருபர்
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் வீதியருகில் இருந்த அப்பக்கடையும் சேதமடைந்துள்ளது.
முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதனாலையே குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது
சனிக்கிழமை மாலை 18.07.2026 இடம் பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
கல்முனையை நோக்கி முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் பயணித்துக் கொண்டிருந்த வேளை முன் சென்ற முச்சக்கர வண்டி வலது பக்கத்திற்கு திரும்பியபோது பின் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முச்சக்கர வண்டியுடன் மோதியனாலையே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது
இதன்போது மோட்டார் சைக்கிள் மோதியதால் முச்சக்கர வண்டியானது கவுண்டு விழுந்துள்ளது. இதனால் முச்சக்கர வண்டியானது பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் சாரதியும் பலத்த காயத்திற்குள்ளாகியுள்ளார் .
No comments