Column Left

Vettri

Breaking News

டெங்குவால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம்!!




குழந்தையின் நோய் நிலைமை தொடருமானால், சில வேளைகளில் இது 'HLH' எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டு நிலைமையாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் நாம் 'CPK' எனப்படும் பரிசோதனையை மேற்கொள்வோம். அவ்வாறு ஏற்பட்டால் ஓய்வு மிகவும் அவசியமாகும். பிள்ளைகளுக்கு இயற்கையான வெள்ளை நிற திரவ ஆகாரங்களை அருந்தக் கொடுங்கள். இதன் மூலம் இந்த நிலைமைகளைக் குறைத்துக்கொள்ளலாம். இது தவிர, இரத்தத் தட்டுக்களின் (Platelets) எண்ணிக்கை 150 வரை குறைந்தால், சில வேளைகளில் நாம் இந்தக் பிள்ளையை வைத்தியசாலையில் அனுமதித்துப் பரிசோதிக்க வேண்டியிருக்கும். டெங்கு குருதிப்போக்கு காய்ச்சல் (Dengue Haemorrhagic Fever) அல்லது டெங்கு அதிர்ச்சி நிலை (Dengue Shock Syndrome) போன்ற நிலைமைகள் காணப்பட்டால், எப்படியும் வைத்தியசாலையில் பரிசோதித்து, 48 மணித்தியாலங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் பிள்ளையை பராமரிக்க வேண்டியிருக்கும். எனவே, டெங்கு இன்னும் உயிருக்கு ஆபத்தானதுதான்..." என்றார். இதேவேளை, கடந்த நாளில் மாத்திரம் சுமார் 1,200 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை நாட்டில் 57,668 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இன்றைய தினமும் பல பகுதிகளில் டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், இதன்போது அரச நிறுவனங்களில் நுளம்புகள் பெருகும் இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us