Column Left

Vettri

Breaking News

டெங்கு நோயாளி அடையாளம்: சாய்ந்தமருதில் புகைவிசிரல் நடவடிக்கை தீவிரம்!!




நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட இடமொன்றில் டெங்கு நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில், டெங்கு நோயாளி வசிக்கும் வீட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நுளம்பு ஒழிப்பு புகைவிசிரல் (Fogging) நடவடிக்கை சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. டெங்கு பரவலைத் தடுப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு இன்றியமையாதது என சுகாதாரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது. வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கக்கூடிய பாத்திரங்கள், பயன்படுத்தப்படாத டயர்கள், தேங்காய் ஓடுகள், மலர்தொட்டிகள் உள்ளிட்ட நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்றுமாறும், சுற்றுச்சூழலை சுத்தமாகப் பேணுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு நோயை ஒழிப்பது சுகாதாரத் துறையின் பொறுப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் சமூகப் பொறுப்புமாகும் என்பதையும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். "டெங்குவைத் தடுப்போம் – ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்" என்ற செய்தியையும் அவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

No comments

Subscribe Us