Column Left

Vettri

Breaking News

சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை- கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம் வெற்றி!!




பாறுக் ஷிஹான் அண்மைக்காலமாக பிராந்தியத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம் இன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டலில் கல்முனை மாநகர சபையின் பூரண ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்போது நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய தேவையற்ற பாத்திரங்கள்பழைய டயர்கள்பிளாஸ்டிக் கழிவுகள்தேங்காய் ஓடுகள்மழைநீர் தேங்கக்கூடிய ஏனைய பொருட்கள்ஆகியன தீவிரமாகச் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டன டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது நம் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும். எனவே, வாரத்திற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது ஒதுக்கி, தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும், நீர் தேங்கும் இடங்களை உடனுக்குடன் அகற்றி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் சுகாதாரப் பிரிவினர் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.

No comments

Subscribe Us